சம்பள விடயத்தில் இ.தொ.கா பின்வாங்காது – ஆறுமுகன் எம்.பி தெரிவிப்பு

Monday, March 21st, 2016

தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்வாங்கவில்லை. உலக சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால் இத் தருணத்தில் சம்பள உயர்வை கேட்க சென்றோமானால் அதனை சதத்தில் தான் தருவார்கள். ஆனால் நம்முடைய கோரிக்கை ஆயிரம் ரூபா ஆகும். கடந்த சம்பள பேச்சுவார்த்தையில் தேயிலை உற்பத்தி விலை 430 ரூபாய் என கூறினார்கள். ஆனால் உலக சந்தையில் விற்பை செய்த தேயிலை 360 ரூபாயாக உள்ளது என காரணம் காட்டினார்கள். ஆகையினால் பொறுமையுடன் இருந்து உலக சந்தையில் தேயிலை விலை உயர்வு அடைந்தவுடன் இ.தொ.கா கூறிய சம்பளத்தை கட்டாயம் பெற்று தரும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலவாக்கைளில் நடைபெற்ற மகளிர் தின விழாஉரையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தனத உரையில் தெரிவித்ததாவது,

இன்று நடைபெறும் விழாவின் இதே இடத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த கணமே ஆயிரம் ரூபாயை சம்பளமாக தருகின்றோம் என சிலர் கூறினார்கள். அவ்வாறு கூறப்பட்ட ஆட்சி எது என்று தெரியவில்லை. இ.தொ.கா 4 மாதத்திலும் சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.

4 நிமிடத்திலும் சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. காங்கிரஸ் சொல்வதை தான் செய்யும். செய்வதை தான் சொல்லும். இதனை நம்பி அணைவரும் ஒற்றுமையுடனும் கட்டுப்பாடுடனும் இருங்கள். இன்று நம்மிடமுள்ள பாரிய பிரச்சினை சம்பள பிரச்சினை இதனை வெற்றிகரமாக இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும் என்பதில் ஐயப்பட வேண்டாம் என்றார்.

Related posts: