பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டது -அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் வெளியானது புதிய சுற்றுநிரூபம்!

Thursday, September 22nd, 2022

அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது

அரச உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை தயாரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

பெண்கள் அலுவலகங்களுக்கு செல்லும் போது புடவை, ஒசரி அல்லது அலுவலகத்திற்கு ஏற்ற உடை அணியலாம் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் சிலர் சுற்றறிக்கையின் முதல் பகுதியை மாத்திரம் அமுல்படுத்துவதாகவும், பொருத்தமான அலுவலக ஆடையை மறந்து விட்டதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தகுந்த அலுவலக உடையை அனுமதிக்க வேண்டும் என புதிய சுற்றறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டு, விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: