சமூகப்பொறுப்புக்களை அரச வங்கிகள் நிறைவேற்ற தவறிவிட்டன -அமைச்சர் கபீர் ஹாசிம்!

அரச வங்கிகள் சமூக பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் அவ்வாறு சமூகப்பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாதபட்சத்தில் அரச வங்கிகளில் எந்த பயனும் இல்லை என்று அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற வங்கி நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். வங்கிகளுக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் வங்கிகளின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தியடைய முடியவில்லை.
அரச வங்கிகள் வருமானத்தை ஈட்டும் செயற்பாடுகளை சரியாக செய்துவருகின்றனர். எனினும் சமூகப்பொறுப்புக்களை மேற்கொள்ளவில்லை அரச வங்கிகள் இலாபம் ஈட்ட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேவேளை சமூக பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். சாதாரண மக்களுக்கும் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் இடையில் அரச வங்கிகள் பாரிய பாரபட்சங்களை காட்டுகின்றது. இது மாற்றப்படவேண்டும் என்று அமைச்சர் ஹாசீம் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|