சண்டிலிப்பாய் பிரதேசத்தில் 197 பேருக்கு வீட்டுத்திட்டம்!

Wednesday, March 14th, 2018

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்துக்கான முன்மொழிவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக 197 பயனாளிகளுக்கான மாதிரி வீட்டுத் திட்டம் முன்மொழியப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு 98.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் மாதிரிக் கிராமம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நேற்று அது சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாததால் இந்தத் திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனைக்கோட்டை, உயரப்புலம், மானிப்பாய் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கி இந்த மாதிரிக் கிராம வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்;தப்படவுள்ளது. அதில் போரால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பத்தினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என பிரதேச செயலர் தெரிவித்தார்.

Related posts: