சட்ட விரோத மின்சாரம் பெற்ற நால்வர் கைது!
Thursday, July 28th, 2016
சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் படி நேற்று முன்தினம் திங்கட்கிழமை(25) இரவு மானிப்பாய் வடக்குப் பகுதியில் மானிப்பாய்ப் பொலிஸாரும், கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து திடீர்ச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் போது சட்ட விரோத முறையில் மின்சாரம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
புன்னாலைக் கட்டுவன் பகுதியில் சட்ட விரோத மின்சாரம் பெற்ற ஒருவரைச் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை!
முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதில் 30 இலட்சம் ரூபா மோசடி: கொழும்பு முன்னணி பாடசாலையொன்றின் ஆசி...
பாடசாலைகளில் பாலியல் கல்வி - கல்வி சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரே...
|
|
|


