சட்ட விரோத துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபர் ஒருவர் கைது!
Wednesday, December 21st, 2016
கட்டுநாயக்க – ஆடி அம்பலம பிரதேசத்தில் சட்ட விரோத துப்பாக்கி மற்றும் ரவைகளை தன் வசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண மாகாண குற்ற தடுப்பு பிரிவினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதுடைய குறித்த நபர் கட்டுநாயக்க பிரதேசத்தினை சேர்ந்தவர் என காவற்துறை ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று மினுவங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts:
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் இருதினங்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
மிருக வைத்தியர்களுக்கு பற்றாக்குறை - மிருக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 2 இலட்சத்து 28,611 விவசாயக் குடும்பங்களுக்கு இலவச யூரியா உரம் - சாவ...
|
|
|


