நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் இருதினங்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
Wednesday, February 24th, 2021
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட 48 தரங்களின் அதிகாரிகள் இன்றும் நாளையும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிழவித்துள்ளனர்.
பதவி உயர்வு வழங்குதல், பயிற்சிகளின் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
சுமார் 20 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக சுகாதார சேவை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினை குறித்து சுகாதார செயலாளரிடம் கலந்துரையாடிய போதிலும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என சுகாதார சேவை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
தரங்குறைந்த மோட்டார் சைக்கிள் தலைக் கவச விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு!
பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்றுறைகளைச் சார்ந்தோரை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் பணி ஆரம்பம்!
ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்கா, பிரித்தானியா அறிவிப்பு!
|
|
|


