சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வருக்கு தலா பத்தாயிரம் அபராதம் !
Friday, June 17th, 2016
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், தலா பத்தாயிரம் ரூபா அபராதமாகவும் விதித்து மல்லாகம் மாவடட நீதவான் எம். ஏ. யூட்சன் நேற்று முன்தினம் புதன்கிழமை(15-06-2016) தீர்ப்பளித்தார்.
கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும், சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து நடாத்திய திடீர்ச் சுற்றிவளைப்பின் போது சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டனர். இந்த நால்வரும் நேற்று முன்தினம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Related posts:
ரஷ்யாவுக்கு தபால் மூலம் பொருட்கள் - பொறுப்பேற்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானம்!
அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை - நெற் செய்கை விவசாயிகளுக்கு 50kg யூரியா மூடை ஒன்றை 10 ஆயிரம் ரூபாவுக்கு...
மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது பிரச்சித்தமான தீர்மானம் அல்ல - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு...
|
|
|


