சங்கானையில் வைத்து இ.போ.ச பேருந்து மீது தாக்குதல்!
Tuesday, November 1st, 2016
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் – காரைநகர் சாலைக்கு சொந்தமான பேருந்து மீது நேற்று (31) இரவு 08.30 அளவில், சங்கானைப் பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சங்கானை – சித்தங்கேணி ஊடாக காரைநகர் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து மீது, சங்கானை – மதவடிப் பகுதியில் வைத்து, மோட்டார் சைக்களில் வந்த இனம்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் காரணமாக பேருந்து சாரதிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்தின் கண்ணாடிகளும் உடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இத் தாக்குதல் தொடர்பில் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
காவல்துறைக்கு எதிராக 1216 முறைப்பாடுகள்!
யாழ்.குடாநாட்டிலுள்ள மீனவர்களின் படகுகளுக்கு விசேட ஸ்ரிக்கர்கள் ஒட்டும் பணி ஆரம்பம்!
குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் மின் வெட்டு ஏற்பட்டால் முறைப்பாடு செய்யவும் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்க...
|
|
|


