சக்கரங்கள் கழன்று பேருந்து விபத்து!

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 9.30 அளவில் புத்தளம் அனுராதபுரம் வீதியின் 20ஆம் கட்டைப் பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் இதில் இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின்போது அதிகமான பயணிகள் குறித்த பேருந்தில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பயணிகள் அனைவரும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தென்மராட்சிக்கு குழாய் மூலம் குடிதண்ணீர்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு!
நாடாளுமன்ற அறிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் பெற நடவடிக்கை - சபாநாயகர்!
|
|