தென்மராட்சிக்கு குழாய் மூலம் குடிதண்ணீர்!

Tuesday, November 1st, 2016

வடமராட்சி கிழக்கு தாளையடியில் அமைக்கப்படும் கடல் நீரை குடிதண்ணீர் ஆக்கும் திட்டத்தின் கீழ் அடுத்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் தென்மராட்சி பிரதேசத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறையுள்ள பிரதேசங்களுக்கு குழாய் மூலம் வழங்கப்படவுள்ளது. தற்போத ஏ-9 வீதியோரமாக குழாய்கள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குடிதண்ணீர் தேவைப்படும் கிராமங்களின் விவரங்களை வழங்குமாறு குடிதண்ணீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தென்மராட்சி பிரதேச செயலக அலுவலர்களைக் கோரியுள்ளனர்.

கடல்நீரைக் குடிதண்ணீர் ஆக்கி பளை, மீசாலை, நாவற்குழி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தாங்கிகள் மூலம் குடிதண்ணீர் பற்றாக்குறையாக காணப்படும் கிராமங்களுக்கு வழங்கப்படவுள்ளது. பிரதேச செயலகத்தில் நீர் வழங்கல் அதிகார சபையின் அலுவலர்களால் நடத்தப்பட்ட கூட்டத்தில் எழுதுமட்டுவாழ் தொடக்கம் நாவற்குழி வரையான ஏ-9 செல்லும் பகுதிகளில் உள்ள கிராம அலுவலர்கள் அழைக்கப்பட்டு குடிதண்ணீர் வழங்குவதற்கான குழாய்கள் பொறுத்தும் பணிகள் நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும், அவர்கள் குழாய்கள் பொருத்தும் பணிகளை மேற்கொள்ளும் போது ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

news_08-05-2016_9283297465-1-_crop_615x324

Related posts: