கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு மெய்வல்லுனர் போட்டிகள் நாளை!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டையொட்டிய மெய்வல்லுனர் போட்டிகள் நாளை வியாழன் பிற்பகல் 2.00 மணிக்கு கலாசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளன.
கலாசாலை உடலாளர் மன்ற ஏற்பாட்டில் அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரச அதிபர் அ. சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும் கலாசாலையின் முன்னாள் அதிபரும் பிரான்ஸ் அரசினால் செவாலியர் விருது வழங்கிக் கௌரவிக் கப்பட்டவருமான சிவயோகநாயகி இராமநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்!
மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் - நிதி அம...
பொதுநலவாய போட்டியில் பாலித்தவுக்கு வெள்ளி - யுபுனுக்கு வெண்கலம்!
|
|