பொதுநலவாய போட்டியில் பாலித்தவுக்கு வெள்ளி – யுபுனுக்கு வெண்கலம்!

Thursday, August 4th, 2022

2022 ஆம் ஆண்டு பேர்மிங்காமில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்ற இறுதி போட்டியில் யுபுன் அபேகோன் 10.14 வினாடிகளில் ஓடி மூன்றாம் இடத்தை அடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக, இலங்கை நேரப்படி புதன்கிழமை (3) இரவு 11.40 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது அரையிறுதிப் போட்டியில் 10.20 வினாடிகளில் கடந்து நான்காவது இடத்தைப் பிடித்த 27 வயதான ஓட்டப்பந்தய வீரர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

கென்யாவின் ஃபெர்டினாண்ட் ஓமன்யாலா (10.02), தென்னாப்பிரிக்காவின் அகானி சிம்பைன் (10.07), இங்கிலாந்தின் நெதனீல் மிட்செல் – பிளேக் (10.13), கெமரூனின் இம்மானுவேல் எஸேம் (10.14), வேல்ஸின் ஜெர்மியா அசு (10.15), அவுஸ்திரேலியாவின் ரோஹன் பிரவுனிங் 17 (10.15), ரோஹன் பிரவுனிங்.7 (10.18) ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.  

செவ்வாய்க்கிழமை (02), அபேகோன் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஆடவர் நிகழ்வின் முதல் சுற்றின்  எண் 06 இல் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிப் போட்டிக்கு அவர்  10.06 வினாடிகளில் ஓடித் தகுதி பெற்றார்.

இதேவேளை, பொதுநலவாய போட்டியில் பாலித்த பண்டார பரிதிவட்டம் எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: