கொழும்பை வந்தடைந்தன சயுர மற்றும் சுர நிமல!

பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இந்தியா கொச்சி துறைமுகத்துக்கு சென்றிருந்த இலங்கை கடற்படை கப்பல்களான “சயுர“ மற்றும் “சுரநிமல” ஆகியவை நேற்று கொழும்பு துறைமுகத்தை மீண்டும் வந்தடைந்துள்ளன.
இந்தக் கப்பல்களின் தலைவர்களான பிரசன்ன அமரதாச மற்றும் பூஜித விதான ஆகியோர் குறித்த கப்பல்களுடன் விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன் இந்திய தெற்கு கடற்படை கட்டளையிடும் அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர ஜெயந்தி நட்கார்னியையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த கப்பல்கள் இரண்டும் பயிற்சிகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமுர்த்தி பெண் உத்தியோகத்தரால் தற்கொலை செய்துகொண்ட குடும்பஸ்தர்: அநாதையாக்கப்பட்ட பிள்ளைகள்!
தொடரும் சீரற்ற வானிலை - இதுவரை ஐவர் உயிரிழப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!
விளையாட்டுக் கல்வி துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை - ஹங்கேரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
|
|