முல்லைத்தீவில் காணிகளின்றி மூவாயிரம் குடும்பங்கள் – மாவட்ட அரச அதிபர் தகவல்!

Saturday, October 29th, 2016

முல்லைத்வுதீ மாவட்டத்தில் சுமார் 3000 குடும்பங்கள் காணிகளின்றி வாழ்ந்த வருவதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தைக் கிழக்கு, வெலிஓயா ஆகிய 6 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 42 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 569 இற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் தமக்கான சொந்தக் காணிகள் இல்லாத நிலையில் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய உதவித் திட்டங்களைப் பெற்றுக் கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கான நிரந்தரக் காணிகளை வழங்குவதற்கு வனஇலாக மற்றும் அது சார்ந்த திணைக்களங்கள் தாமதங்களையும் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றன என பல்வேறு தரப்புக்களாலும் குற்றஞ் சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மாவட்டத்தில் 3000இற்கும் மேற்பட்ட காணிகளற்ற குடும்பங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் இவர்களுக்கு உரிய முறைப்படி காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

rupa

Related posts: