கொழும்பு மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அருட்பணி அன்டன் ரஞ்சித் அடிகளார் திருநிலைப்படுத்தப்பட்டார்.
Sunday, August 30th, 2020
கொழும்பு மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக பேரருட்திரு. அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை இன்று திருநிலைப்படுத்தப்பட்டார்.
கொழும்பு லூசியாஸ் பேராலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஆயத்துவ திருப்பொழிவு திருப்பலி வழிபாட்டின் போது கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையால் அவர் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஜுலை மாதம் 13ஆம் திகதி பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஜுலை மாதம் 13ஆம் திகதி இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வத்திக்கானிலிருந்து வெளியிட்டிருந்த நிலையில், இன்றைய தினமே உத்தியோகபூர்வமாக ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய சிறப்புத்திருப்பலியில் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் உட்பட பத்திற்கும் மேற்பட்ட ஆயர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கன்னியாஸ்திரிகளும் பங்குபற்றியிருந்தனர்.
Related posts:
வாழைப்பழத்தின் விலை குடாநாட்டில் திடீர் வீழ்ச்சி
இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம் - சட்டமா அதிபர் உயர் நீதிமன...
போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு - 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் ...
|
|
|


