கொழும்பு துறைமுக உணவகத்தில் தீ!
Thursday, December 8th, 2016
கொழும்பு துறைமுகத்தின் உணவகத்தில் பரவிய தீயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
துறைமுக உணவகத்தில் இன்று (08) அதிகாலை தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.துறைமுக தீயணைப்புப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ விபத்தில் 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts:
குப்பை மேட்டிலிருந்து கஞ்சா பொதிகள் மீட்பு!
குடாநாட்டில் ஈரக் காற்றினால் காய்ச்சல் பரவுகிறது
இலங்கையில் அச்சம் தரும் வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று - அரச மருத்துவ சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!
|
|
|


