குப்பை மேட்டிலிருந்து கஞ்சா பொதிகள் மீட்பு!

Thursday, December 15th, 2016

யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெனிஸ்லோஸின் கீழ் இயங்கும் விஷேட போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு யாழ். புறநகர் பகுதியூடாக கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக தகவலொன்று கிடைத்திருந்ததையடுத்து  நேற்று பிற்பகல் யாழ்.செம்மணி சுடலை பகுதியில் வெளிமாவட்டம் ஒன்றுக்கு கடத்தி செல்வதற்காக குப்பை மேட்டில் குப்பைகள் போல போடப்பட்டிருந்த 7 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

இவ் ஒவ்வொரு கஞ்சா பொதியும் தலா இரண்டு கிலோ நிறையுடையதாக காணப்பட்டதாகவும், இவற்றின் மொத்த பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபா எனவும் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெனிஸ்லோஸ் தெரிவித்திருந்தார்.

அத்துடன் குறித்த கேரள கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், அது தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை யாழ்.பருத்திதுறை பகுதியிலும் இது போன்றே கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை குடத்தனை வடக்கு சுடலைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 8கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் மொத்த பெறுமதி 32லட்சம் ரூபாக்கள் எனவும், இவை தொடர்பிலும் யாரும் கைது செய்யப்படாத நிலையில் இது தொடர்பான விசாரனைகளும் இடம்பெற்றுவருவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1959500519image1

Related posts: