கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் போர் கப்பல்கள்!

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான நாஸர் மற்றும் சாய்ப் ஆகிய கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.
இரண்டு நாடுகளின் கடற்படைக்கும் இடையிலான பலமான மரபு சார் நிபுணத்துவ மற்றும் சகோதரத்துவ உறவின் ஒரு பகுதியாகவே குறித்த கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.
இந்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளன. அத்துடன் நாளை நாசர் கப்பலில் வரவேற்பு நிகழ்வு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
மீளவும் சட்டமா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை!
கடன் மறுசீரமைப்புக்காக ஜனாதிபதி ரணில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் - சீனாவின் ...
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று நயினாதீவு விஜயம்!
|
|