கொலையாளி தொடர்பான தகவல்தர பொதுமக்களிடம் கோரிக்கை!
 Tuesday, August 30th, 2016
        
                    Tuesday, August 30th, 2016
            
சிலதினங்களுக்கு முன்னர் கண்டி பிரதேசத்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரினால் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கொலை இடம்பெறுவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பு குறித்த இடத்திற்கு வருகைத் தந்த கொலையாளி சிவப்பு நிற டீசேர்ட் அணிந்திருந்ததுடன், தலைமுடியை குட்டையாக வெட்டியிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இதுவரை கொலையாளி கைது செய்யப்படாததால் இந்த நபர் குறித்த மேலதிக தகவல்களை பொலிஸார் பொதுமக்களிடம் எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் தெரியும் பட்சத்தில் 071-4735628 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை தருமாறு மாத்தளை பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்
Related posts:
பனங்களி உற்பத்தி தொடர்பில் பளையில் பயிற்சி !
அதிகம் கடன்பட்ட நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்கத் தயார் - சீன பிரதமர் சர்வதேச நாணய நி...
பல வருடங்களாக பயன்படுத்தப்படாத  23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        