கொரோனா பரவலுக்கு மத்தியில் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரதும் பொறுப்பாகும் – பிரதமர் தெரிவிப்பு!
Saturday, December 25th, 2021
அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை உலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் பண்டிகை நினைவூட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இறைவனின் அன்பும், கண்ணியமும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்திற்கு நம்பகமான அடித்தளமாக அமைந்துள்ளது.
கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த உலகை, மீள புத்துயிர்பெறச் செய்வதுடன், நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரது பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
A/L பரீட்சை : 80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்..!
அடுத்த மாதம் காட்டு யானைகளின் கணக்கெடுப்பு!
ஐந்து கட்சிகளின் கோரிக்கையை ஐக்கியதேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதா? - தோழர் ரங்கன் கேள்வி!
|
|
|


