சிறுவர்களை கடத்துவதாக வெளியாகும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் – பொலிஸ் தலைமையகம் கோரிக்கை!

Friday, June 2nd, 2023

சிறுவர்களை கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிச் செல்லும் போலி செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் மீண்டும் பொதுமக்களை கோரியுள்ளது.

அவ்வாறான போலித் தகவல்களை பரிமாற்றுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிறார்கள் கடத்தப்படவுள்ளதாக அண்மைய சில நாட்களாக கிடைக்கப்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, போலியானவை என கண்டறியப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறுவர்கள் கடத்தல் முயற்சி சம்பவம் தொடர்பாக, அவசியம் என கூறி பொலிஸ் எந்த ஒரு நபரைப் பற்றியும் தகவல் வெளியிடவில்லை.

இதன்காரணமாக அவ்வாறான போலி பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேநேரம், அவ்வாறான போலி தகவல்கள் தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அடிப்படை தேவைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்தி திருநெல்வேலிப் பொதுச் சந்தை வியாபாரிகள் எதி...
யாழ். குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு - கட்டுப்படுத்த பொலிசார் விசேட நடவடிக்கை முன்னெடு...
இரு வாரங்களில் வழமைக்கு திரும்பும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு...