குழந்தை பிறந்து 6 நாட்களில் இளம்தாய் ஒருவர் மரணம்

Thursday, January 25th, 2018

குழந்தை பிறந்து ஆறு நாட்களேயான நிலையில் இளம்தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அனிக்கன் குளம் மல்லாவியை சேர்ந்த சசிகலகுமார் மேரிவியித்தா (வயது ௲ 28) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

திருமணமாகி ஒரு வருடம் ஆன குறித்த பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 7 ஆம் திகதி மல்லாவி வைத்தியசாலைக்கு சென்று குருதி அமுக்கத்தினைப் பரிசோதித்துள்ளார்.

பின்னர் கடந்த 18 ஆம் திகதி கிளிநொச்சி மருத்துவமனையில் சத்திரசிகிச்சை மூலம் பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். குழந்தை பிறந்த நாளில் இருந்து இவர் பேச்சு மூச்சின்றி கோமா நிலையில் இருந்துள்ளார்.

குழந்தை பிறந்த அன்றைய தினமே இவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது நேற்றைய தினம் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருக்கு இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயால் இவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

Related posts:

அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பமானி மற்றும் முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டம் ...
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத 1,300 க்கும் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்க...
உள்முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகிரங்கமாக விமர்சனம் செய்யக்கூடா...

ஐ.நாவில் பல நாடுகள் ஆதரவு கிடைக்கும் - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை!
மின் கட்டணத்தை நினைத்தவுடன் இனைத்தவாறு அதிகரிக்க முடியாது - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவி...
இலங்கைக்கு புதிய தொழில் வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் - கொரிய பிரதமர் ஹான் டக் சூ உறுதிய...