மின் கட்டணத்தை நினைத்தவுடன் இனைத்தவாறு அதிகரிக்க முடியாது – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு!

Thursday, April 28th, 2022

மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை. இதேநேரம் நிறைவேற்றுத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரின் விருப்பத்துக்கமைய மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாது.

அத்துடன் நள்ளிரவில் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிப்பதை போன்று மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாதெனவும் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முழுமையாக அனுமதி வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.

மின்கட்டண அதிகரிப்புக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இக்காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பகுதிகள் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W: காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை 2 மணி நேரமும் மாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் பகுதி CC: காலை 06 முதல் 09 வரை 3 மணி நேரமும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: