குமரபுரம் படுகொலை! இன்று மேலும் 10 பேர் சாட்சியம்!

Friday, July 8th, 2016

திருகோணமலை குமரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் நேற்றும் 10 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

கடந்த 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற இப்படுகொலையின் போது சுமார் 26 பேர் வரை கொல்லப்பட்டனர். இது குறித்த வழக்கு விசாராணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

நேற்றையதினம், நீதிமன்றில் முன்னிலையான, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் காயப்பட்டவர்கள் என 10 பேர் சாட்சியமளித்துள்ளனர். இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் மேலும் 13 பேருக்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கு விசாரணைகளில் தற்போது வரை 32 பேர் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: