குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள் நியமனம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் பல வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளுக்கு குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளில் கடமையாற்றுவதற்கு தகுதியான 65 வயதுக்குட்பட்ட ஓய்வுநிலை குடும்பநல உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன என யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் க.நந்தகுமரன் அறிவித்துள்ளார்.
கடமையாற்ற விரும்புவோர் பொருத்தமான ஆவணங்களுடன் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொண்டு விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
Related posts:
பத்து மில்லியன் ரூபா செலவில் அளவெட்டித் தபாலகம் நிர்மாணம்!
பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி!
முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!
|
|