குடாநாட்டு விவசாயிகளுக்கு நிவாரண கட்டண அடிப்படையில் மின்சாரம்!
Friday, October 28th, 2016
யாழ் விவசாயிகளின் நன்மை கருதி முன்னெடுக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகளுக்கான நிவாரண கட்டண அடிப்படையிலான மின்விநியோகம் தற்பொழுது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்மாவட்டத்தில் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 5 மணி வரையில் ஒரு மின் அலகிற்கு 6 ரூபா 85 சதம் என்ற ரீதியில் நிவாரண கட்டண அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேபோன்று அடிப்படைக் கட்டணம் 600 ரூபாவானது 300 ரூபாவாரையில் குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts:
பொரளை குடியிருப்பு தொகுதி தீ!
இதுவரை 103 முறைப்பாடுகள் - ஜனாதிபதி ஆணைக்குழு!
பிரதமர் தினேஷ் குணவர்தன - பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு - இருநாடுகளினதும் ஜனநாயக நாடாளுமன்ற செயற்பா...
|
|
|


