குடாநாட்டில் குழாய்க் கிணறு அமைக்க அனுமதி என தீர்மானம்!

Wednesday, March 8th, 2017

நிலத்தடி நீர் மாசுபடும் வகையில் யாழ்ப்பாணம் குடாநாட்டில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய்க் கிணறுகளைத் தடைசெய்ய வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நீர்வள முகாமைத்துவக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு குழாய்க் கிணறுகளும் ஓர் காரணமாக அமைகின்றது. வீடுகள், பொதுக்கட்டிடங்கள், அமைக்கும் போது அதற்கான அனுமதியில் குழாய்க் கிணறுகள் அமைப்பது தொடர்பில் இறுக்கமான முடிவுகள் பின்பற்றப்பட வேண்டும். தனிப்பாவனை குழாய்க்கிணறு என்றால் சகல தரப்பினரின் ஆய்வின் பின்னர் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் அமைக்க பிரதேச சபை மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக அனுமதிக்கலாம்.

அதனைத் தவிர்த்து விடுதிகள் பொது இடங்களில் குழாய்க் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்குபவரின் சட்ட ஏற்பாட்டை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைக்கும் உரிமையாளர்கள் மற்றும் கிணறு அமைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். எனவே இனிவரும் காலத்தில் அவ்வாறு அமைக்க அனுமதிக்கப்பட்தோடு ஏற்கனவே முறையற்று அமைத்தவதவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் அத்தோடு உரிய அனுமதிகளை பெற்று குழாய்க் கிணறுகள் அமைப்பவர்களும் அனுமதிக்கப்பட்ட அளவிலான குழாய்க் கிணறுகளை அமைக்கின்றனரா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக் கலந்தரையாடலில் நீர் வடிகாலமைப்புச் சபையினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts:


தாய்மாருக்கானதாக மாறிவரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை:  வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முன...
போலி தகவல்களை வழங்கும் கொரோனா நோயாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ...
நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது!