போதையில் சாரத்தியம் இருவருக்கு ரூ. 6000 தண்டம்!
Tuesday, January 23rd, 2018
மதுபோதையில் வாகனம் செலுத்திய இரு சாரதிகளுக்கு தண்டத்துடன் சாரதி அனுமதிப் பத்திரத்தையும் இரு வாரங்களுக்கு நிறுத்தி வைத்தது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் மன்று.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மது போதையுடன் வாகனத்தை செலுத்தினார்கள் என இருவர் கைது செய்யப்பட்டனர். இரு சாரதிகளையும் பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் காரணத்தால் இருவருக்கும் தலா 6000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாரதி அனுமதிப்பத்திரங்களை இரு வாரங்களுக்கு இடைநிறுத்தி வைத்து தீர்ப்பளித்தது நீதிவான் மன்று.
Related posts:
ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!
கொரோனா: தப்பிக்க மருத்துவ நிபுணர்கள் விடுக்கும் கோரிக்கை!
"உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கத் தயார் - அம...
|
|
|


