கிழக்கின் பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு முடிவு !
Tuesday, May 3rd, 2016
கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளை நண்பகல் 12 மணி வரை மாத்திரம் நடத்துவதற்கு மாகாண கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது
எதிர்வரும் 6 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன தெரிவித்தார்
தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாகாவே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்
இதேவேளை நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக ஏனைய சில மாகாணங்களிலும் நண்பகல் 12 மணிவரை பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை!
ஓய்வூதியர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நாளை!
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு – கட்டுப்படுத்துவது அவசியமென வலியுறுத்...
|
|
|


