கிளிநொச்சி வீதி விபத்தில் ஒருவர் பலி!
Sunday, September 25th, 2016
கிளிநொச்சி ஏ-9 வீதி முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏ-09 வீதியின் திருமுறிகண்டி பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி இரணைமடுவைச் சேர்ந்த வேலாயுதம் சதீகரன் (39) என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.இவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
வயாவிளான் ஆலய புனரமைப்புக்கு இராணுவத்தினர் அனுமதி!
பாதுகாப்பு வலயத்தில் திருடப்படும் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் - மீள்குடியேறிய பிரதேச மக்கள் கோரிக்...
உயர்தர - புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை அறிவித்தது பரீட்சை திணைக்களம்!
|
|
|


