கிளிநொச்சியில் பொதுச்சுகாதார பரிசோதகர் பற்றாக்குறை!
Tuesday, June 12th, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் 23ஆயிரம் மக்களுக்கு ஒரு பொதுச்சுகாதார பரிசோதகர் என்ற அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் வாழ்கின்ற மக்கள் தொகைக்கு ஏற்ப எண்ணாயிரம் பேருக்கு ஒரு பொது சுகாதாரப்பரிசோதகர் என்ற அடிப்படையில் சேவையாற்ற வேண்டும். ஆனால் 23ஆயிரம் பேருக்கு ஒரு சுகாதார பரிசோதகர் என்ற அடிப்படையில் கடமையாற்றி வருகின்றனர்.
அத்துடன் ஏனைய மருத்துவத்துறைகளிலும் பெரும் ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
யூலை-21 ஆம் திகதி முதல் யூலை-28 ஆம் திகதி வரை சகோதரத்துவ வாரம்!
யாழில் வசமாக மாட்டிய சைக்கிள் திருடன் – பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
நீர்வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்பு!
|
|
|


