கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா!
Thursday, May 13th, 2021
கிளிநொச்சி – கண்டாவளை பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டாவளை – கட்டைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த மாணவியொருவர் வெளிமாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்று வருகின்றார்.
மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் வீடு திரும்பிய அவர், வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதுடன் வீட்டாருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை வெளியாகிய பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளில், 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
சிறிய வாகனங்களின் விலை ஒன்றரை இலட்சம் ரூபாவினால் அதிகரிப்பு!
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை - படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெர...
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அ...
|
|
|


