கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, December 24th, 2021

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதற்காக இன்று வெள்ளிக்கிழமைமுதல் மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையின்போது, தேவாலயங்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

நாளை கிறிஸ்துமஸ் பெருவிழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் சவுக்கு மர தடிகளின் விற்பனை யாழ்ப்பாணத்தில் இன்று களைகட்டியது.

யாழ்ப்பாண நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சவுக்கு மரத் தடிகளின் விற்பனை நடைபெற்றதுடன் அதனை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் தங்களது வீடுகளில் பாலன் குடில் அமைத்து சவுக்கு மரங்களால் அலங்கரிப்பது வழமையாகும்.

000

Related posts: