கல்வி திட்டங்களுக்கு அதி முக்கிய இடம் வழங்கப்படும் – செலவுத் திட்ட உரையில் நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த!

Tuesday, November 17th, 2020

2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்டது.

தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது 100,000 ஆக உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் இணைப்பு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபாயினை உதவித்தொகையாக வழங்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: