கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பம்!

Tuesday, June 6th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட 7.6 சதுரகிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்ற வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களிலும் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பகுதிகளில் தற்போது வெடிபொருள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் 579 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் வெடிப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கிளாலி, முகமாலை, இத்தாவில் போன்ற பகுதிகளில் 7.6 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்ற வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

கறுப்புச்சட்டை போட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்காக பெற்றுக்கொடுத்தது என்ன? - ஈ.பி.ட...
கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளால் மக்கள் தொடர்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர...
வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை புரிந்துணர்வின் மூலம் உயர்த்த முடியும் - ஜனாதிபதி !