இலங்கை கடற்படை சாதித்துள்ளது : அமெரிக்கா பாராட்டு !
Thursday, March 5th, 2020
சட்டவிரோத போதைவஸ்துக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கை கடற்படை சாதித்துள்ளதாக அமெரிக்கா பாராட்டியுள்ளது.
தமது பங்களா நாடு ஒன்று அந்த நடவடிக்கையை மேற்கொண்டமை தொடர்பில் தாம் மகிழ்வதாக அமெரிக்கா தூதரகம் தெரிவித்துள்ளது.
தமது நாட்டினால் அன்பளிப்பு செய்யப்பட்ட சமுத்ரா மற்றும் கஜ்பாகு ஆகிய கப்பல்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில் அவை இலங்கையின் இறைமைக்கு உதவியுள்ளன என்றும் அமெரிக்கா தூதரகம் குறிப்பிட்டுள்ளது
அண்மையில் கடற்பகுதியில் மீட்கப்பட்ட போதைவஸ்துக்களின் சந்தைப்பெறுமதி 600 கோடி ரூபாவுக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு !
பாடசாலைகளுக்கு வருகை தர விரும்பும் ஆசிரியர்களை தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படு...
50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளையதினம் ஏல விற்பனை - இலங்கை மத்திய வங்கி அ...
|
|
|


