நாளை ‘கொழும்பு பாதுகாப்பு’ மாநாடு ஆரம்பம்!

Sunday, August 27th, 2017

‘2017  கொழும்பு பாதுகாப்பு மாநாடு ‘ என்ற தலைப்பிலான மாநாடு பண்டாரநாயக்க ஞாபகார்;த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் தொனிப்பொருள் ‘கடும் போக்காளர்களுக்கு எதிரான உலகளாவிய செயற்பாடு’ என்பதாகும். இந்த மாநாடு கொழும்பில் 7வது தடவையாக இடம்பெறுகிறது. பாதுகாப்பு துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 200 பேர் அடங்கலாக 800ற்கு மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

சாம்பியா நாட்டின் இராணுவத் தளபதி, தெற்காசிய பிராந்திய நாடுகளின் இராணுவ முக்கியஸ்தர்கள், மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இத்துறையுடன் சம்பந்தப்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 15 புத்திஜீவிகளும் உள்ளுர் புத்திஜீவிகள் 12 பேரும் மாநாட்டில் உரையாற்ற உள்ளனர்.

Related posts: