கல்லுண்டாய் வெளியில் 50 பேருக்கு வீடுகள்!

Thursday, March 28th, 2019

அரச காணிகளில் தங்கியிருந்த நீதிமன்ற உத்தரவின் கீழ் வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வீடுகள் அமைக்கும் பணிகள் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப்பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது  –

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அரச காணிகளில் தங்கியிருந்த, நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியேற்றப்பட்டு வீடுகள் இல்லாத மக்களுக்கு முதல் கட்டமாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீள் குடியேற்ற அமைச்சின் நிதியில் 50 பேருக்கான வீடுகள் மாவட்டச்செயலகத்தின் ஊடாக அமைக்கப்படவுள்ளன. தலா ஒருவருக்கு 2 பரப்பு அரச காணி கல்லுண்டாய் பகுதியில் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகள் மூலம் ஏனையவர்களுக்கான வீடுகள் அரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts:


கொழும்பு செல்லும் பார ஊர்திகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பி.சி.ஆர் பரிசோதனை - மாவ...
அடுத்த வருடம்முதல் இலங்கைக்கு பொருந்தும் வகையிலான புதிய பாடத்திட்டம் நடைமுறைக்குவரும் - கல்வி அமைச்...
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் - பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்...