கரையோர பகுதிகளில் தென்னம் பிள்ளைகள் நாட்டல்!
Monday, January 2nd, 2017
பொம்மை வெளியை அண்டிய கரையோரங்களில் யாழ்.மாநகராட்சி மன்றம் தென்னம் பிள்ளைகளை நட்டுள்ளது. சுமார் நூறு வரையிலான தென்னம் பிள்ளைகள் நடப்பட்டுள்ளன என்று மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அவற்றுக்குப் பாதுகாப்புக் கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. கரையோரப் பகுதியில் உவர் நிலப் பிரதேசத்தில் தென்னங் கன்றுகள் விரைவாக வளரும் என்பதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலும் தென்னங் கன்றுகள் கரையோரப் பிரதேசத்தில் நடத்தப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts:
திருக்கேதீஸ்வரத்துக்கான பாதயாத்திரை ஆரம்பம்!
சாரதிகளிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர்!
அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானது - அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை...
|
|
|


