கனடாவில் யாழ்ப்பாண இளைஞன் மரணம்!

Sunday, December 17th, 2017

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் தற்கொலை செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான பாலமுரளி கிருஷ்ணா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிர் பறிக்கும் விளையாட்டான புளுவேல் விளையாடிய நிலையில், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக காணப்பட்டதாகவும் அதிலிருந்து விடுபட மருத்துவ உதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.மருத்துவ ஆலோசனையின்படி அதிலிருந்து விடுபட அவரது சிந்தனையை வேறு வழியில் திசைதிருப்ப வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 12ம் திகதி துப்பாக்கி சூட்டு விளையாட்டுக்கு சென்ற வேளையில், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.கனடாவின் ரொறண்டோவில் வசித்து வரும் பாலமுரளி, Brock பல்கலைக்கழக மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.உலகளாவிய ரீதியில் தடை செய்யப்பட்டுள்ள புளுவேல் விளையாட்டு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். எனினும் இவ் விளையாட்டு அப்ஸ் ஐ சர்வதேச ரீதியாக முற்றாக இல்லாதொழிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

தனியார் பேருந்துகளை நடத்துநர்களின்றி இயக்க யோசனை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிப்பு - இலங்க...
நீதிபதிகளின் ஒழுக்கம் தொடர்பில் நீதிமன்ற சேவை ஆணைக்குழு நடவடிக்கை - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெ...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து - சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பா...