கதிர்காமம் சென்ற பேருந்து விபத்து!
Tuesday, July 19th, 2016
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் காயமடைந்தார்.
நேற்று மாலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தயிர்வாடி சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றது. இச்சம்பவத்தில் காயமடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனச்சாரதி தப்பித்துச் சென்றுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
நட்பு நாடாக இருந்தாலும் தரம் குறைவான சீன உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது – அரசாங்கம் தெரிவிப்பு...
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் – ஜனாதிபத...
இலவச கல்வி - பட்டதாரி மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட அரச செலவு வெளியானது!
|
|
|


