கட்டாக்காலி கால்நடைகளைப் பிடித்து மீளளிக்கும் தண்டப்பணம் அதிகரிப்பு யாழ்ப்பாண மாநகர சபை அறிவிப்பு

கட்டாக்காலி கால்நடைகளை மீளப் பெறுவதற்கு அறிவிடப்படும் தண்டப் பணத் தொகையை யாழ்ப்பாண மாநகர சபை நிர்வாகம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டப் பணத் தொகை அதிகரிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் மாநகரில் கட்டாக்காலிகளாக நடமாடும் கால்நடைகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையால் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாக நடமாடும் கால்நடைகள் பிடிக்கப்படுகின்றன. அவற்றை உரிமையாளர்கள் தண்டப் பணத்தைச் செலுத்தியே மீளப் பெற்றுச் செல்கின்றனர். திரும்ப திரும்ப இந்தக் கால்நடைகளை உரிமையாளர்கள் மேய்ச்சலுக்காக அவிட்டு விடுகின்றனர்.
கட்டாக்காலிக் கால்நடைகள் யாழ்ப்பாண நகரில் நடமாடுவதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதோடு மக்களும் பல்வேறு அசளகரியங்களையம் எதிர்கொள்கின்றனர். இதன் காரணத்தால் இந்தக் கால்நடைகளை பிடிப்பதற்கு முன்பாக அவற்றை மீள உரிமையாளரிடம் வழங்குவதற்காக அறவிடப்படும் தண்டப் பணத்தொகையை அதிகரிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|