கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்பு

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமைக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்கள் உரிய முறையில் பின்பற்றப்படாத நிலையில், கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மீன்பிடித் தடையை ஏற்படுத்தி இருந்தது. இதனை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில் நேற்றையதினம் இந்த தடையை நீக்குவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கல சமரவீர, இந்த தடை நீக்கத்தை அடுத்து ஜுலை மாதம் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான கடலுணவுப் பொருட்களின் ஏற்றுமதியை மீள ஆரம்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்
இலங்கையின் கடலுணவுப் பொருட்களில் 68 சதவீதமானவை கடந்த காலங்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது மீண்டும் இந்த சந்தை வாய்ப்பு கிடைத்துள்ளமையானது, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
|
|