கடலாமை இறைச்சி , முட்டைகளை வைத்திருந்த ஐவர் கைது!
Tuesday, February 7th, 2017
கிளிநொச்சி – பூநகரி, பள்ளிக்குடா பகுதியில் கடலாமை இறைச்சி மற்றும் கடலாமை முட்டைகள் என்பவற்றை சட்டவிரோதமாக வைத்திருந்த 5 நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 6.5 கிலோகிராம் கடலாமை இறைச்சி மற்றும் 2.5 கிலோகிராம் கடலாமை முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் மீட்கப்பட்ட இறைச்சி ஆகியவற்றை பூநகரி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Related posts:
வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை.!
பிரதமராகின்றார் ரணில் விக்கிரமசிங்க - இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் - சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சட்டமா அதிபர் அறிவிப்பு!
|
|
|


