கடற்படை துப்பாக்கி சூடு நடத்தவும் தயார்- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!
Sunday, December 11th, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது கடற்படை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை மறுத்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன,பிரச்சினை தொடர்ந்தால் துப்பாக்கிப் பிரயோகம்நடத்தவும் கடற்படையினருக்கு முடியும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
கடற்படை எவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஹம்பாந்தோட்டையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் பின்னால் அரசியல் சக்தி செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினர்.

Related posts:
நுண்கடன் தொல்லை: மேலும் ஒரு தற்கொலை!
பணிக்குத் திரும்புமாறு பல்கலை. கல்விசாரா ஊழியர்களுக்கு அழைப்பு - உயர் கல்வி அமைச்சு!
யாழ்ப்பாணம் ,நல்லூர் ,வேலணை பகுதிகளில் பியர் நுகர்வு 27% மாக குறைவடைந்துள்ளதாக மதுவரி திணைக்களம் தக...
|
|
|


