கடந்த ஆண்டு நாய் கடித்து மூவர் பலி: 7,661 பேருக்கு சிகிச்சை!

கடந்த ஆண்டு 7,661 பேர் நாய்கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் மூவர் உயிரிழந்தனர். என யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவின் சிறப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2015ஆம் ஆண்டு நாய்கடிக்கு இலக்காகி 7,703பேர் சிகிச்சை பெற்றனர். கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்குப் பிரதான காரணம். நாய்கடிக்கு இலக்கானால் 10 நாள்களுக்குள் வைத்தியசாலையில் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
கடித்த நாயை கொல்லக்கூடாது. சில சந்தர்ப்பங்களில் அவற்றை அடைத்து வத்து அவதானிக்கலாம். குறிப்பிட்ட நாள்களுக்குள் விசேட அனுமதி பெற்றுக்கொலை செய்யலாம். கடந்த ஆண்டு நாய்கடிக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள் உரிய சிகிச்சைப் பெறாதுள்ளமையே காரணம் – என்றார்.
Related posts:
|
|