கஞ்சா விற்பனை செய்தவர் கைதானார்!
Saturday, June 11th, 2016
வடக்குப் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை அச்சுவேலிப் பொலிஸார் கடந்த வியாழக்கிழமை(09-6-2016) காலை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் வயாவிளான் சுதந்திர புறம் பகுதியில் தொடர்ச்சியாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அச்சுவேலிப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதும் சந்தேகநபரின் வீட்டிற்குச் செல்கின்ற போதெல்லாம் மேற்படி நபர் தலைமறைவாகி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வடக்குப் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கஞ்சா விற்பனையில் நபரொருவர் ஈடுபடுவதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் பிரகாரம் சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் சந்தேகநபரிடமிருந்து 6 கட்டுச் சரையினையும் மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் வசாவிளான் சுதந்திரபுரத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரெனவும் தெரிய வருகிறது.
Related posts:
|
|
|


