உடை மாற்றும் அறை இன்மையால் தாதிய அலுவலர்கள் சிரமம்!

Friday, February 3rd, 2017

தாதிய அலுவலருக்கான சீருடையுடன் பேருந்தில் பயணிக்க முடியாது. என தாதிய அலுவலர்கள் தெரிவித்துள்ள நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் தாதியர்கள் உடை மாற்றும்  அறை இல்லையால் பெண் தாதிய உத்தியோகத்தர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 26 தாதிய அலுவலர்கள் கடமையாற்றுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வேறு பிரதேசங்களில் இருந்து பேருந்தில் கடமைக்கு வருகின்றனர். தாதிய உடையுடன் நோயாளர்களுக்குச் சேவை செய்ய முடியாது. சாதாரண உடையுடன் வைத்தியசாலைக்கு வந்தால் உடைகள் மாற்ற அறை கிடையாது. பெரும் சிரமத்தின் மத்தியில் கடமைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. என்று அவர்கள் தெரிவித்தனர்.

போரால் முழுமையாக அழிவடைந்த சாவகச்சேரி வைத்தியசாலையில்  விடுதி வசதிகள்இ வைத்திய அதிகாரிகள் வதவிடம் என்பன மீள அமைக்கப்பட்டன. தாதிய அலுவர்களுக்கான வதிவிடம் இன்னமும் அமைக்கப்படவில்லை. வைத்தியசாலையில் கடமையாற்றும் தென்பகுதியைச் சேர்ந்த தாதிய அலுவலர்கள் தாம் கடமையாற்றும் விடுதிகளில் காணப்படும் அறைகளில் தற்காலிகமாகத் தமது பயணப்பைகளை மாதாந்தம் மாற்றிக் கடமையாற்றுகின்றனர். வைத்தியசாலையில் நிரந்தர தாதியர் வதிவிடத் தொகுதிக் கட்டடம் உருவாக்க வேண்டும் என்று வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

chavakachcheri

Related posts: