கிராமிய மருத்துவமனைகளில் உரிய தாள்களில் எழுதி மாத்திரைகளைத் தரவும்!

Tuesday, September 25th, 2018

கிராமிய மருத்துவமனைகளில் மருந்துகள் சுற்றிக்  கொடுக்கப்படும் கடதாசிகள் உரிய முறையில் இல்லை. ஏற்கனவே எழுதப்பட்ட குறிப்புப் புத்தகங்களின் தாள்களிலும் இதுபோன்ற ஒழுங்கற்ற கடதாசிகளிலும் அவற்றை எழுதுவதால் மருந்தாளர் எழுதித் தருவதையும் ஏற்கனவே எழுதியுள்ளவற்றையும் வேறுபடுத்த முடியவில்லை என்று பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

மருந்து வழங்க உறைகள் இன்மையால் பழைய கடதாசிகளில் அல்லது ஏற்கனவே மாணவர்கள் எழுதிய குறிப்புப் புத்தகங்களிலிருந்து பெறப்பட்ட தாள்களில் சுற்றியே மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இது முதியோருக்கு மட்டுமின்றி இளையோருக்கும் சிக்கலாக உள்ளது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு இதற்கு நிதி ஒதுக்கி சீரானதும் பாதுகாப்பனதுமான முறையில் மாத்திரைகளை வழங்க வேண்டும் .

Related posts: